SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ தேரோட்டம் கோலாகலம்

2017-04-20@ 14:20:23

நெல்லை: நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் நேற்று தேரோட்டம் ேகாலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர். நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ திருவிழா கடந்த 11ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தொடர்ந்து சுவாமி மற்றும் தாயார்கள் தினமும் சிம்ம வாகனம், அனுமன், சேஷ, கருட, யானை, புன்னை மரம் உள்ளிட்ட பல்ேவறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் பெருமாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதைதொடர்ந்து காலை 7.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. செயல் அலுவலர் முருகன், தக்கார் சுபாஷினி ஆகியோர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் பிடித்து இழுத்தனர். 10ம் திருவிழாவான இன்று சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், நண்பகல் 12 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு சுவாமி புஷ்ப பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது. 11ம் திருவிழாவான நாளை 21ம் தேதி கந்தப்பொடி உத்சவம் பெருமாள் வெள்ளி தோளுக்கினியானில் வீதிஉலாவுடன் விழா நிறைவடைகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jatayu_bird11

    200 அடி நீள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன், பறவைகள் சரணாலயம் : கேரளாவில் உருவாக்கம்

  • othigai_111sunami

    கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் அச்சம்

  • chennai_udall11

    உடல் உறுப்புதான வார விழா : உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

  • SnowfallnorthernIndia

    வட இந்தியாவில் தொடங்கியது பனிப்பொழிவு: குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீ மூட்டும் மக்கள்

  • goa_train_acc

    கோவாவில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்