SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்காடு அருகே முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2017-04-20@ 14:19:45

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புணரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கணபதி பூஜையும், அதனை தொடர்ந்து ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் திருவலம் சாந்தா சுவாமிகள் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு பூஜைகள் செய்தார். பின்னர் கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு மஹா அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு) உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்