SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலையில் மழை வேண்டி வருண லிங்க சன்னதியில் சிறப்பு யாகம்

2017-04-20@ 14:15:48

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்க சன்னதியில், மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடந்தது. தமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், பொதுமக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர். நீர்நிலைகள் வறண்டதால் விவசாய சாகுபடி பொய்த்துவிட்டன. இதுவரை எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிபடுகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகளில் ஒன்றான வருண லிங்க சன்னதியில் நேற்று மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. உபயதாரர் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில், இந்த யாகம் நடந்தது. அதையொட்டி, வருண லிங்க சன்னதி எதிரில் யாக குண்டம் அமைத்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.

மேலும், தண்ணீர் நிரப்பிய அகன்ற பாத்திரத்தில் அமர்ந்தபடி, வருண பகவானை வேண்டி மந்திரங்களை உச்சரித்தனர்.  கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் ஒவ்வொரு விதமான நன்மையை தருபவை என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி, வருண பகவானால் வழிபாடு நடத்தப்பட்ட லிங்கம் எனும் சிறப்பு மிக்க வருண லிங்க சன்னதியை வழிபட்டால் மழை வரும் என்பது நம்பிக்கையாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jatayu_bird11

    200 அடி நீள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன், பறவைகள் சரணாலயம் : கேரளாவில் உருவாக்கம்

  • othigai_111sunami

    கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் அச்சம்

  • chennai_udall11

    உடல் உறுப்புதான வார விழா : உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

  • SnowfallnorthernIndia

    வட இந்தியாவில் தொடங்கியது பனிப்பொழிவு: குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீ மூட்டும் மக்கள்

  • goa_train_acc

    கோவாவில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்