SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

2017-04-20@ 14:14:26

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் பெருந்திருவிழா கடந்த 9ம் தேதி இரவு முத்துமாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்று முதல் ஒவ்வொரு மண்டகப்படியும் நடைபெற்றது. நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முத்துமாரியம்மன் பெரிய தேரிலும், அய்யனார் தனித்தேரிலும், சுப்பிரமணியர் தனித்தேரிலும் வலம் வந்தனர். 3 தேர்களும் புறப்பட்டு கோயிலை சுற்றி வெளிபிரகாரத்தில் வலம் வந்து தேர்கள் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து இன்று 20ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரியும், இரவு முத்துப்பல்லக்கு, வாணவேடிக்கையும் நடைபெறுகிறது. நாளை 21ம் தேதி வெள்ளிக்கிழமையோடு திருவிழா நிறைவு பெறுகிறது.  பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏஎஸ்பி அரவிந்த்மேனன் உத்தரவின்பேரில், தாலுகா இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீஸார் செய்திருந்தனர். ஏற்பாடுகளை தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை உத்தரவின்பேரிலும், உதவி ஆணையர் உமாதேவி வழிகாட்டுதலின் பேரிலும், முத்துமாரியம்மன் கோயில் தக்கார் சரவணன், சரக ஆய்வாளர் முருகேசன் செயல் அலுவலர் குழந்தைவேல் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்