SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடுதல்

2017-04-20@ 14:13:40

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் இறுதியில் சித்திரைத் திருவிழா எட்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன்களை செலுத்துவர். எட்டு நாட்கள் இரவு, பகல் என நடக்கும் இத்திருவிழாவைக் காண தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று காலை கோயில் வளாகத்தில் நடந்தது. நேற்று அதிகாலை பரம்பரை உபயதாரர்கள் மேளதாளத்துடன் வீரபாண்டி முல்லைபெரியாற்றில் இருந்து முக்கொம்பை எடுத்து வந்து கோயிலில் நட்டனர். பின்னர் பரம்பரை உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர், புனித நீரால் அபிஷேகம் செய்தனர்.

மேலும், போடியை சேர்ந்த பரம்பரை பட்டயக்காரர்கள் வீரபாண்டி முல்லையாற்றங்கரையில் உள்ள கன்னீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து பக்தி பரவசத்துடன் அரிவாள் மீது ஏறி வந்து கம்பத்திற்கு புனிதநீர் தெளித்தனர். கம்பம் நட்டதையடுத்து நேற்று கோயிலில் உள்ள உற்சவ அம்மன் சிலை வீரபாண்டி கிராமத்திற்குள் உள்ள கோயில் வீட்டிற்கு சென்றது. இதனையடுத்து, நேற்று மாலை முதல் தொடர்ந்து 22 நாட்களுக்கு உபயதாரர்கள் மூலம் மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மண்டகப்படி நடத்தப்பட இருக்கிறது. 23ம் நாளான வருகிற மே 9ம் தேதி முதல் 16ம்தேதி வரை சித்திரைத் திருவிழா நடக்க உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்