SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

2017-04-19@ 14:18:23

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தாசபளஞ்சிக சமூகத்தின் சார்பில் 65ஆம் ஆண்டு தேர் திருவிழா நேற்று நடந்தது. துருவம்மண் கோவிலில் இருந்து காலை 11 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது.  பின்னர் பகல் 12 மணிக்கு தந்தி மாரியம்மன் கோவிலுக்கு அருகே திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னூர் ஆர்டிஓ கீதப்பிரியா, குன்னூர் டிஎஸ்பி முத்தமிழ், வண்டிச்சோலை ஆசிரம சன்னியாசி ஜீவன் முக்தானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.   

வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஷ்வரன் நிகழ்ச்சிக்கு  தலைமை வகித்தார். சங்க  கௌரவ ஆலோசகர்கள் குருமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ராவணனை வதம் செய்வதை போன்ற தத்ரூப சிலையும் ஊர்வலத்தில் பங்கேற்றது. இதனையடுத்து விநாயகர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை சங்க செயலாளர் ரமேஷ், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tulipTOEWFLOAWERS

    அமெரிக்காவில் ஸ்கஜித் பள்ளத்தாக்கில் 34-வது மலர் திருவிழா: பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

  • INDAIANdogEXHIBIATION

    கென்னல் கிளப் சார்பில் நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சி : பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்பு

  • fireFRIIN4hatrdAMBB

    அச்சகத்திற்கு மை தயாரிக்கும் கம்பெனியில் தீடீரென்று ஏற்பட்ட தீவிபத்து : 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

  • ooti_kodai_flow

    விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி & கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது

  • streets_madhava

    சித்திரை திருவோணப் பெருவிழா : சேஷ வாகனத்தில் மாதவப்பெருமாள் வீதி உலா