SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல்லில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை

2017-04-17@ 14:57:28

நாமக்கல்: நாமக்கல்சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், நேற்று காலை மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்தது. கடந்த ஆண்டு சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 50 சதவீதத்திற்கும் குறைவாக பெய்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. குடிக்க கூட தண்ணீரின்றி பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். விவசாய நிலங்கள் வறண்ட பாலையாய் மாறிவிட்டது. பல்வேறு தரப்பினரும் வருணபகவானிடம் மழை வேண்டி சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு, நாமக்கல்சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக்நவீத் தலைமையில் மழைவேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. கோட்டை பள்ளிவாசல் முத்தவல்லி சசியுல்லா, நேதாஜிநகர் பள்ளிவாசல் முத்தவல்லி குலாப்ஜான், பள்ளிவாசல்களின் இமாம்கள் சாதிக், இப்ராகிம், மன்சூர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.இதில் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மழைவேண்டி தொழுகை நடத்தினர். அப்போது, மழை வேண்டியும், மழையால் தண்ணீர் கிடைத்து மக்களின் தண்ணீர் பற்றாக்குறையும், விவசாயம் செழிக்கவும் தொழுகை நடத்தப்பட்டது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2017

    21-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • stone_lay_eggs11

    30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டையிடும் விசித்திர மலை குன்று!- குழப்பத்தில் விஞ்ஞானிகள்

  • black_sea123

    கருங்கடலில் 2500 ஆண்டுகள் பழமையான 60 கப்பல்கள் கண்டுபிடிப்பு

  • rain_train_flightss

    கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை : ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து

  • mexico_earthquakkee

    மெக்சிகோ நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் : 250 பேர் பலி ; கட்டடங்கள் தரைமட்டமாகின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்