SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக நன்மை வேண்டி உடையாளூர் காளியம்மனுக்கு மகாசண்டி யாகம்

2017-04-17@ 14:37:47

கும்பகோணம்: உலக நன்மைக்காக கும்பகோணம் அடுத்த உடையாளூர் காளியம்மன் கோயிலில் 16ம் ஆண்டு மகா சண்டியாகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 14ம் தேதியன்று கோட்டை வாசல் விநாயகர் அபிஷேகம், பால்குளத்தி அம்மன் அபிஷேகம், அய்யனார் அபிஷேகம், விநாயகர் பூஜை நடந்தது. கடந்த 15ம் தேதி 64 யோகினிகள் மற்றும் 64 பைரவர்களுக்கு தீபாராதனை நடந்தது. நேற்று விநாயகருக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் மகாசண்டி யாகம் துவங்கியது. இதில் 13 அத்யாயஹோமம், பிரம்மச்சரிய பூஜை, கன்னியா பூஜை, திரவ்யாஹூதி சவுபாக்ய திரவ்ய ஹோமம், பட்டு புடவை ஹோமம் நடந்தது. மாலையில் காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tulipTOEWFLOAWERS

    அமெரிக்காவில் ஸ்கஜித் பள்ளத்தாக்கில் 34-வது மலர் திருவிழா: பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

  • INDAIANdogEXHIBIATION

    கென்னல் கிளப் சார்பில் நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சி : பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்பு

  • fireFRIIN4hatrdAMBB

    அச்சகத்திற்கு மை தயாரிக்கும் கம்பெனியில் தீடீரென்று ஏற்பட்ட தீவிபத்து : 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

  • ooti_kodai_flow

    விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி & கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது

  • streets_madhava

    சித்திரை திருவோணப் பெருவிழா : சேஷ வாகனத்தில் மாதவப்பெருமாள் வீதி உலா