SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனி உத்திர திருக்கல்யாண நிறைவு விழா : தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்ச்சி

2017-04-15@ 12:48:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண நிறைவு விழாவையொட்டி நேற்று தாமரைகுளத்தில் பாலிகை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாவான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கடந்த 9ம் தேதி இரவு திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.  விழாவின் தொடர்ச்சியாக கடந்த 10ம் தேதி கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடியும், 11ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், அதைத்தொடர்ந்து 12, 13ம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழாவின் நிறைவாக நேற்று திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் குமரகோயிலில் மண்டகப்படியும், சுவாமி, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kkonnor_chims_park11

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கம்

  • tasmac_protestt

    டாஸ்மாக் கடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன

  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • skjimBURNdisease26AGE

    பிலிப்பைன்சில் அரிய வகை தோல் நோயால் முதியவர் போல் தோற்றமளிக்கும் 26 வயது இளைஞர்