SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்

2017-04-13@ 15:01:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே உள்ள அருணாபுரம் கூத்தாண்டவர் கோயிலில் 512வது பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9மணிக்கு கூத்தாண்டவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் யுத்த கோலத்தில் பவனி வந்தார். இந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். முன்னதாக பக்தர்கள் வேண்டுதலை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேர் மீது தங்கள் விளை
நிலத்தில் விளைந்த தானியங்களை வாரி இறைத்ததுடன் ஆடு, கோழிகளை பலியிட்டனர். மேலும் தாலி கட்டிக்கொண்ட அரவாணிகள் மற்றும் ஆண்களும் தேர்முன் ஆடிப்பாடி கும்மியடித்துக் கொண்டு சென்றனர். மாலையில் களபலி உற்சவமும், இரவு இந்திர விமானத்தில் காட்டு கோயிலுக்கு சுவாமி சென்றடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tulipTOEWFLOAWERS

    அமெரிக்காவில் ஸ்கஜித் பள்ளத்தாக்கில் 34-வது மலர் திருவிழா: பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

  • INDAIANdogEXHIBIATION

    கென்னல் கிளப் சார்பில் நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சி : பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்பு

  • fireFRIIN4hatrdAMBB

    அச்சகத்திற்கு மை தயாரிக்கும் கம்பெனியில் தீடீரென்று ஏற்பட்ட தீவிபத்து : 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

  • ooti_kodai_flow

    விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி & கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது

  • streets_madhava

    சித்திரை திருவோணப் பெருவிழா : சேஷ வாகனத்தில் மாதவப்பெருமாள் வீதி உலா