SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.2 கோடி

2017-04-13@ 15:00:22

பழநி: பழநி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடி கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 22 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.2 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரத்து 215 கிடைத்தது. இதுதவிர தங்கம் 740 கிராம், வெள்ளி 12,200 கிராம், வெளிநாட்டு கரன்சி 1043 கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியை
கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.  தொடர்ந்து இன்றும் உண்டியல் எண்ணும் பணி நடக்கிறது என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tulipTOEWFLOAWERS

    அமெரிக்காவில் ஸ்கஜித் பள்ளத்தாக்கில் 34-வது மலர் திருவிழா: பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

  • INDAIANdogEXHIBIATION

    கென்னல் கிளப் சார்பில் நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சி : பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்பு

  • fireFRIIN4hatrdAMBB

    அச்சகத்திற்கு மை தயாரிக்கும் கம்பெனியில் தீடீரென்று ஏற்பட்ட தீவிபத்து : 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

  • ooti_kodai_flow

    விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி & கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது

  • streets_madhava

    சித்திரை திருவோணப் பெருவிழா : சேஷ வாகனத்தில் மாதவப்பெருமாள் வீதி உலா