SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வருஷாபிஷேகம்

2017-04-12@ 14:50:17

தென்காசி: தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மூலஸ்தான விமான கோபுர கலசங்கள், விநாயகர், சுவாமி, அம்பாள், பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. அபிஷேகங்களை முத்துக்கிருஷ்ணன்பட்டர், கைலாசபட்டர், செந்தில்பட்டர் ஆகியோர் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெயராமன், கணக்கர் பாலு, மணியம் செந்தில்குமார், வருஷாபிஷேக கட்டளைதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

  • road_safetyr

    சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்