SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தையா சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பரிவேட்டை

2017-04-11@ 14:08:28

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் முருக பெருமானின் அவதாரமான முத்தையா சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சேலம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்பட 15 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இக்கோயிலில் பங்குனி உத்திர பரிவேட்டை நடந்தது. இதனை முன்னிட்டு முத்தையா சுவாமி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி அதே பகுதியில் உள்ள வயலுக்கு பரிவேட்டை சென்றார். அங்கு நேர்த்தி கடன் வேண்டி பக்தர்கள் கிடா வெட்டி சுவாமியை வணங்கினர்.

தொடர்ந்து கோயில் வளாகத்திற்கு பல்லக்கில் வந்த முத்தையா சுவாமியை, மாங்கல்ய பாக்கியம் தழைக்க வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் வழி நெடுகிலும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டனர். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செல்வம், வழக்கறிஞர் கலைச்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tulipTOEWFLOAWERS

    அமெரிக்காவில் ஸ்கஜித் பள்ளத்தாக்கில் 34-வது மலர் திருவிழா: பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

  • INDAIANdogEXHIBIATION

    கென்னல் கிளப் சார்பில் நடைபெற்ற அகில இந்திய நாய் கண்காட்சி : பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்பு

  • fireFRIIN4hatrdAMBB

    அச்சகத்திற்கு மை தயாரிக்கும் கம்பெனியில் தீடீரென்று ஏற்பட்ட தீவிபத்து : 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

  • ooti_kodai_flow

    விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி & கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது

  • streets_madhava

    சித்திரை திருவோணப் பெருவிழா : சேஷ வாகனத்தில் மாதவப்பெருமாள் வீதி உலா