SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நண்டு பூஜித்த நாயகன்

2017-03-20@ 09:59:11

தற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் இது. தல புராணப்படி உமாதேவி ஒருசமயம் இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோயிலைச் சுற்றி உள்ள அகழியில் பூத்த தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். ஆனால், அதற்குமுன் அந்த அகழியை உருவாக்கி அதில் தாமரை மலர்களை வளர்த்துவந்த இந்திரன், ஒரு நண்டு அம்மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான்.

உண்மையை அறியாத அவன், லிங்கத்தின் மீது ஊர்ந்துசென்று தாமரை மலர்களைச் சாத்த முயன்ற அந்த நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். வெட்டு சிவபெருமான் மீது விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் தன் லிங்கத் திருமேனி உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அதனுள் புகுந்த சக்தியைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோயிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்தது.

நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோயில் கற்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகளைக் காணலாம். உச்சியில் துவாரமும் அப்படியே உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம்பசு பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் சென்று
கற்கடேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசிக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • children_protestt11

  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

 • 2500_type_idlyy

  உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

 • 30-03-2017

  30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • FLIHJTarestre

  செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

 • farmersSUPPORtstuMAR

  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்