SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏன் என்ற கேள்விகள் எதற்கு?

2017-03-18@ 10:23:19

இறைத்தொண்டுக்காக இவ்வுலகைச் சுற்றிப்பயணம் செய்தபோது திருப்பணியாளரைப் பார்த்து கேள்விகள் எழுப்பப்பட்டன. சில நேரங்களில் அக்கேள்விகள் பதிலளிக்கப்பட முடியாதவைகளாய் இருக்கும். சில கேள்விகள் மோசமாகக் கேட்கப்படும். ‘ஏன் கடவுள் உலகைப் படைத்தார்?’‘நாம் எங்கிருந்து வந்தோம்?’ ‘எப்படி அவரிடமிருந்து தனிமைப் பட்டோம்?’ இப்படிப் பல கேள்விகள். இவ்வாறு குறுகிய வட்டத்துக்குள் யோசித்து சித்தாந்தமான கேள்விகள் கேட்பதெல்லாம் வீண் என்று திருப்பணியாளருக்குத் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் அத்தகைய கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. அதை அவர் பெரிதுபடுத்தியதும், விரும்பியதும் இல்லை. நாம் இருக்கும் உலகமே பொய்யானது. உலகத்தில் இருக்கும் அனைத்துமே மாயை என்று அவரால் மதிப்பிடப்பட்டு பதில் கூற முயற்சிக்கவில்லை.

இதைப்போன்ற கேள்விகளுக்கு பதில் கேட்டுப் பலர் தொல்லை செய்துள்ளார்கள். அவர்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டி அவர் ஒரு கதையைச் சொன்னார்.
ஒரு மனிதனுடைய வீடு தீப்பிடித்து விட்டது. வீட்டிலிருந்த அனைவரும் அத்தீயிலிருந்து வெளியேறி விட்டார்கள். ஆனால், அவன் மட்டும் வெளியே வரவில்லை. வெளியேறியவர்கள் அவனை நோக்கி, வந்துவிடு, வந்துவிடு என்று கத்திக் கதறினார்கள். ஆனால், அவன் உள்ளிருந்தவாறே பதிலளித்தான். நான் வெளியேறுவதற்கு முன்பு எனக்கு சில கேள்விகளுக்குப் பதில் தெரிந்தாக வேண்டும். எப்படி வீடு தீப்பிடித்தது? இந்தத் தீயின் வெட்பத்தன்மை எவ்வளவு? இத்தீயில் என்னென்ன ரசாயனங்கள் உள்ளன? இதைத் தெரிந்துகொள்ளும் வரை நான் இதிலிருந்து வரமாட்டேன் என்றான்.

திருப்பணியாளர் அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்து, ‘‘உங்கள் வீடு நெருப்பில் எரிகிறது. இப்படிச் சிறுமைப்பட்டுக் கேள்விகள் கேட்காமல் தீயை அணையுங்கள்!’’ ‘‘அனைவரும் அளவற்ற ஆசைகள் என்னும் தீயில் அகப்பட்டுக் கருகிக் கொண்டிருக்கிறோம்’’என்றார். அந்த ஆசைகளுக்கான காரணங்களை ஆராயாமல் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழியைத் தேட வேண்டும். நாம் காணும் காட்சிகளின் பின்னே பல உண்மைகள் அடங்கி இருக்கலாம். அவற்றை உணர்ந்து கொள்ளும் பொறுமையும் அறிவும் இருந்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.

‘‘உங்கள் மனம் செயலாற்றத் தயாராக இருக்கட்டும். அறிவுத் தெளியுடையவர்களாக இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைக்கிசைய நடந்தது போலன்றி கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவராய் இருங்கள். ஏனெனில், நான் தூயவன் என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.  (1 பேதுரு 1: 1316)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jatayu_bird11

    200 அடி நீள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன், பறவைகள் சரணாலயம் : கேரளாவில் உருவாக்கம்

  • othigai_111sunami

    கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் அச்சம்

  • chennai_udall11

    உடல் உறுப்புதான வார விழா : உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

  • SnowfallnorthernIndia

    வட இந்தியாவில் தொடங்கியது பனிப்பொழிவு: குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீ மூட்டும் மக்கள்

  • goa_train_acc

    கோவாவில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்