சமயபுரம் போஜீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
2017-03-06@ 12:14:14

திருச்சி: சமயபுரம் போஜீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலான 13ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான போஜீஸ்வரர் கோயிலில் புதிய பிரகாரம் அமைக்கப்பட்டு விநாயகர் சன்னதி, சண்முகர் சன்னதி, நவக்கிரக சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, நந்தி மண்டபம் மற்றும் சுவாமி விமானம், அம்மன் விமானம் புதுப்பிக்கப்பட்டு பஞ்சவர்ணம் பூசப்பட்டு திருப்பணி நிறைவு பெற்றது. இதைதொடர்ந்து கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 2ம் தேதி முதல் யாகசாலை பூஜை துவங்கி நடந்தது.
நேற்று அதிகாலை 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் போஜீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. விநாயகர் கோயிலில் கும்பாபிேஷகம்: முசிறி அண்ணாநகரில் உள்ள பாலவிநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம், காவிரியிலிருந்து திருமஞ்சணம் எடுத்து வருதல், வேதபாராயணம், யாகசால பூஜை நடந்தது. இதைதொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
மேலும் செய்திகள்
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் அன்னக்கொடை உற்சவம் : 50 கிலோ தயிர்சாதம் படையல்
சங்கரன்கோவில் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி : பக்தர்கள் புனிதநீராடல்
பெரம்பலூரில் 5 ஆண்டுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கருடசேவை : திரளானோர் தரிசனம்
திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு