SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளிப்பதற்கு இறங்கும்போது......

2013-12-11@ 16:00:48

சரண பாதையில் குளிப்பதற்காக பல இடங்களிலும் பம்பை நதியை பயன்படுத்துவது உண்டு. இங்கும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. எரிமேலி ரூட் டில் செல்லும் பக்தர்கள் கணமலையில் வாகனம் நிறுத்தி பம்பை நதியில் குளிக்க இறங்குகின்றனர். அந்த பகுதியில் ஆழம் அதிகம் உண்டு. எனவே  கவனமாக இறங்க வேண்டும். வடசேரிக்கரை ரூட்டில் போகின்ற ஐயப்ப பக்தர்கள் பெருநாடு முதல் நதிக்கரை யோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு குளிக்க
இறங்குகின்றனர்.  

இரண்டு நதிகள் இங்கே உள்ளன. பம்பா நதியும் கக்காட்டாறும் இங்கு பாய்கிறது. மூழியார், கக்காடு, மணியார் ஆகிய இடங்களில் மின்சாரம் உற்பத்தி
செய்யப்பட்ட பின்னர் வெளியேற்றப்படுகின்ற தண்ணீர் கக்காட்டாறு வழியாக பாய்கிறது. மின் உற்பத்தி தொடங்கினால் உடனே ஆற்றில் தண்ணீர் மட்டம் திடீரென்று உயரும். எனவே குளிப்பதற்கு இறங்குகின்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பெருநாடு பூவத்தும்மூடு முதல் வடசேரிக்கரை வரை பம்பா நதியில் குளிக்கடவு என்று அழைக்கப்படுகின்ற குளிப்பதற்கு இறங்குகின்ற பகுதிகளில்  அருகே
வாகனங்கள் நிறுத்தி குளிப்பதற்கு இறங்குவது வழக்கமாகும். தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளின்  அருகே இங்கே குளிக்கலாம் என்று அறிவிப்பு பலகைகளை வைத்திருப்பர். இதனை கண்டு ஏமாறாமல் இதனை கவனத்தில் கொள்வதுடன் ஆற்றில்  ஆழமான பகுதிகளும், வெள்ளப்பெருக்கு வருவதையும் கருதி பக்தர்கள் கவனமாக குளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்