SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வைணவ ஆலய தைப்பூசம்

2017-02-06@ 15:15:27

108 திவ்ய தேசங்களில் திருச்சேறை 15வது திவ்ய தேசமாகும். கங்கை, காவேரி இருவரில் யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்ட போது முடிவில் இருவரும் பிரம்மனிடம் நீதி கேட்கச் சென்றனர். த்ரிவிக்ரம அவதாரம் எடுத்த போது சத்தியலோகம் வரை நீண்ட எம்பெருமானது பாதங்களை நான்முகன் திருமஞ்சனம் செய்ய, அதுவே பெருக்கெடுத்து ஓடி கங்கை நதியாகியது. எனவே கங்கையே புனிதமானவள் என்று நான்முகன் கூறினார்.

இதனை கேட்டு வருத்தமுற்ற காவேரி சாரபுஷ்கரணியில் உள்ள அரசமரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டாள். மகாவிஷ்ணு தை மாச பூச நட்சத்திர தினத்தன்று குழந்தையாய் தோன்றி தவழ்ந்து வர, கோடி சூர்யபிரகாசத்தை கண்ட காவேரி, அது குழந்தையன்று எம்பெருமானே என்று உணர்ந்து தொழுது நின்றாள்.

திருமால் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவிகள் புடை சூழ சங்கு சக்ர தாரியாக காவிரிக்குகாட்சியளித்தார். “கங்கையிற் புனிதமாய் காவேரி” என அருள் புரிந்தார். இத்தலத்தில் காவிரிக்கு தனி சந்நதி உள்ளது. மார்கண்டேயர் முக்தி அடைந்த  திருத்தலம் என்பர். வைணவ ஆலயத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும் ஒரே தலம் எனும் சிறப்பு பெற்றது இத்தலம்.

- குமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

  • german_trainhydro

    ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்