SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலமலை முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி விழா

2016-09-26@ 12:45:47

க.பரமத்தி : பாலமலை முருகன் கோயிலில் நடந்த 18ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பாலசுப்பிரமணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 18ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழா நடைபெற்றது. விழாவையொட்டி முருகப் பெருமானுக்கு விசேஷ சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் ஜெகன்நாத ஓதுவார் பக்தர்கள் குழுவினர் கோயிலை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்பு விநாயகர் வழிபாட்டுடன் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அனைத்து படிகளுக்கும் தலைவாழை இலை வைத்து அதன்மேல் பச்சரிசி, தேங்காய், பழம் வைத்து மலர்களை தூவி தீபம் ஏற்றி திருப்புகழ் பாடி ஒவ்வொரு படியாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல் கோயிலில் உள்ள 55 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெற்றது. திருப்புகழை பழனி வெங்கடேசன் ஓதுவார் குழுவினரின் இசைச் சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் பல்வேறு மலர்களை தூவி வழிபாடு செய்தனர். விழாவில் கோயில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்