SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் சதுர்த்தி பிரசாதம் : அப்பம்

2016-09-03@ 11:40:19

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்
வெல்லம் - அரை கப்
பழுத்த வாழைப்பழம் - 1
தேங்காய் - சிறிய துண்டு
ஏலக்காய் - 1
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை


அரை கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு மசித்து  வைக்கவும். தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை வெல்லத்தோடு சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி  மாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து அதில் வெல்ல நீரை விட்டு கரைக்கவும். இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்  கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கரைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றவும். அப்பம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி மறு  பக்கம் வேகும் வரை வைத்து சிவந்ததும் எடுக்கவும். இதே முறையில் எண்ணெயில் ஊற்றாமல், பணியாரக் குழியில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்