SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை முதல்வர்

2016-09-03@ 10:44:10

‘கணபதி பாப்பா மோரியா’ என்ற ஓங்கிய குரல், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒலிக்கிறதென்றால் அங்கே விநாயகர் சதுர்த்தி விழாக்கள் ஆரம்பமாகிவிட்டன என்று அர்த்தம்.  முக்கியமாக மும்பை நகரில் பிரசித்தி பெற்று விளங்குகிறார் சித்தி விநாயகர். பெயர்தான் சித்தி விநாயகரே தவிர, இவர் சித்தி&புத்தி இருவருடனும் விளங்குகிறார். இருநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவர் இந்த சித்தி விநாயகர். 1801ம் ஆண்டு, நவம்பர் மாதம், 19ம் தேதி, வியாழக்கிழமை இவருக்கு முதன் முதலாக கோயில் அமைந்ததாக ஒரு பதிவு சொல்கிறது. முழுமையான கோயிலாக உருப்பெற்றது 1900ம் ஆண்டில்! ஞானம், கிரியை என இரு சக்திகளையும் கொண்டு அருள்பாலிக்கும் இந்த விநாயகர், தன் பக்தர்களுக்கு எல்லா வளங்களையும், நலன்களையும் அள்ளித் தருகிறார்.

குறிப்பாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இவரை வணங்கி வேண்டிக் கொண்டால் அந்த பாக்யமும் வரப் பெறுகிறார்கள். இந்த விநாயகர் கோயிலை புனரமைப்பதில் தியூபாய் பாடீல் என்ற பெண்மணி பிரதானமானவராக விளங்கினார். மாதுங்கா பகுதியில் வசித்து வந்த இவர், மக்கட் செல்வம் அருளும் இந்த விநாயகரை பலரும் தரிசித்து நன்மையடைய வேண்டும் என்று விரும்பினார். கட்டிட கான்ட்டிராக்டரும், தன் கணவருமான லஷ்மண் விது பாடீல் உதவ, அரியதோர்   கோயில் உருவானது. இத்தனைக்கும் தியூபாய் பாடீலுக்கு மழலைச் செல்வம் கிட்டவில்லை. தனக்கு கிடைக்காது போனாலும், அந்த பாக்யத்துக்காக ஏங்கும் பிற பெண்களின் விருப்பம் ஈடேற வேண்டும் என்பதற்காக அந்தக் கோயிலை நிர்மாணிப்பதில் அவர் முழுமையாக ஈடுபட்டவர் அவர்.

இப்போது அந்த தம்பதி, தேவருலகிலிருந்தபடி தாம் உருவாக்கிய கோயில் பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அருள்வது கண்டு நிச்சயம் மகிழ்வார்கள். சித்தி விநாயகர் கோயில் கருவறை, மூன்று  வாசல்களை கொண்டது. உள்ளே வலம்புரி விநாயகராக தரிசனம் தருகிறார் மூலவர். நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தாமரை, மேல்  இடது கரத்தில் அங்குசம், கீழ் வலது கையில் அக்க மாலை, கீழ் இடது கையில் கொழுக்கட்டை என்று தாங்கியிருக்கிறார். இரு விழி கருணை இத்தனை பக்தர்களுக்குப் போதுமா என்று  நினைத்தாரோ, நெற்றியிலும் ஒரு கண் அமைந்திருக்கிறது இவருக்கு.  அபூர்வமான வலம்புரி விநாயகர் இவர். தமிழ்நாட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைப்போல. மார்பின் குறுக்கே பாம்புப் பூணூல்.

செவ்வாய்க்கிழமை இந்த சித்தி விநாயகருக்கு மிகவும் உகந்த நாள். அன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் குழுமுகிறார்கள். சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய்க்கிழமை அன்றே அமையுமானால் அன்று பக்தர்கள்  எண்ணிக்கை மேலும் பல லட்சங்களாகும். ‘சங்கஷ்டி’ என்றும், ‘அங்காரிகை’ என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. ‘பிள்ளையாரில்  ஆரம்பித்து ஆஞ்ச நேயரில் முடிப்பது’ என்று சொல்வார்கள். அதற்கிணங்க இக்கோயிலில் அனுமனுக்கு தனி கோயில் ஒன்றும் உள்ளது.  இவருக்கு சனிக்கிழமை விசேஷமான நாள். மகாராஷ்டிர மக்களின் ஏகோபித்த கடவுளாக விளங்குகிறார் இந்த சித்தி விநாயகர்.

- ரித்விக்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

 • holifestivel

  வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்