SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்

2016-08-05@ 11:01:20

புதுக்கோட்டை : புதுகை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுத்துடன் துவங்கி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கொடிக்கம்பத்திற்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரகதம்பாள் மற்றும் திருக்கோகர்ணேஸ்வரர் வீதிஉலா நடந்தது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் தினமும் மண்டகப்படிதாரர்களின் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பிரகதாம்பாளை எழுந்தருள செய்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு பிரகதம்பாள், திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்