SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா

2016-08-03@ 14:29:35

புதுமண தம்பதியர், பக்தர்கள் ஆற்றில் புனிதநீராடல்

செங்கம் : செங்கம் அடுத்த நீப்பத்துறையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி தென்பெண்ணை ஆற்றில் புதுமண தம்பதியர், பக்தர்கள் புனிதநீராடி சுவாமி தரிசனம் செயதனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் உள்ள சென்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை முதலே கோயிலிலும், தென்பெண்ணை ஆற்றிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புதுமண தம்பதிகள், பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர். மேலும் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்.

மேலும் விருந்து சமைத்து குடும்பத்தினர், உறவினர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர். கடந்த 5, ஆண்டுகளாக தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு நாளில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் புனிதநீராட முடியாமல் அவதிப்பட்டனர். இந்தாண்டு கிருஷ்ணகிரி அணையில் இருந்து ்நேற்று முன்தினம் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பக்தர்கள் ஆற்றில் புனித நீராட முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் உள்ள கமண்டலநாகநதி கரை அருகே அமைந்துள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் நேற்று ஆடி பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி சிவன், பார்வதி, புத்திரகாமேட்டீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்தி சுவாமிகள் உற்சவமூர்த்திகளுக்கு கோயில் படித்துறையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கமண்டல நாகநதியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று சுவாமிகள் படித்துறை வழியாக கோயிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்