SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடல், நதியில் பொதுமக்கள் புனித நீராடல்

2016-08-03@ 14:22:58

குளத்தூர் : குளத்தூர் அருகே சிப்பிகுளம் கடற்கரையில் ஆடிஅமாவாசை தினத்தை முன்னிட்டு மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆடிஅமாவாசையை முன்னிட்டு குளத்தூர், விளாத்திகுளம், புளியங்குளம், பூசனூர், மார்த்தாண்டம்பட்டி, சக்கம்மாள்புரம், வேடநத்தம், புதூர், நாகலாபுரம், சண்முகபுரம், வீரபாண்டியாபுரம் என பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய கடற்கரையில் குவிந்தனர். ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும். அவர்களின் பரிபூரண ஆசீர்வாதம் தங்களது சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை. இதனால் நேற்று அதிகாலை 4மணி முதலே கடற்கரையில் தர்பணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலில் புனிதநீராடி பின்னர் வீட்டில் தெளிப்பதற்காக பாட்டில்களில் கடல் நீரை தீர்த்தமாக எடுத்து கொண்டனர். மேலும் வேதவிற்பன்னர்கள் மூலமாக தங்களது மூதாதையர்களுக்கு அரிசி, எள், வெல்லம், காய்கறிகள் என பலவித பொருட்களுடன் படையலிட்டு தர்ப்பணம் செய்தனர். சிலர் தங்களுக்கு இயன்றவாறு பத்தி, சூடன் ஏற்றி முன்னோர்களை நினைத்து வேண்டினர். கூட்ட நெரிசலை தவிர்க்க குளத்தூர் எஸ்ஐ மீஹா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது.

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய உகந்த நாளாக விளங்கி வருகிறது.
இதனால் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்வது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வே இடங்களில் ஆற்றங்கரை மற்றும் கடற்கரைகளில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான ஆண்கள் கலந்து கொண்டு தங்கள் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்து பித்ரு வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்