SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசைக்காக அதிகாலை 3 மணிக்கே அனுமதி

2016-08-03@ 12:39:34

பல்லாயிரம் பேர் தரிசனம்

வத்திராயிருப்பு :
ஆடி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி மலைக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த ஜூலை 28ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மழை காரணமாக 29ம் தேதி அனுமதிக்கப்படவில்லை.
ஆடி அமாவாசையையொட்டி, நேற்று முன்தினமே மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை 3 மணிக்கே தாணிப்பாறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடமைகளை சோதனையிட்டு வனத்துறையினர் அனுமதித்தனர். ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருபெயர்ச்சி ஒன்றாக வந்ததால், கடந்த ஆண்டைவிட பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் காலை 9 மணி அளவில் மாங்கேணி பகுதியில் திடீர் நெரிசல் ஏற்பட்டது.

சிறிதுநேரத்தில் நிலைமை சீரானது. மாலை 7 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். விழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு, காலை 6 மணிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், இளநீர் என 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தாணிப்பாறை விலக்கில் இருந்து வண்டிப்பண்ணை அடிவாரம் வரை உள்ள  தோப்புகளில் பக்தர்கள் வாகனங்களுடன் முகாமிட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்