SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு, குருபெயர்ச்சி, ஆடி அமாவாசை

2016-08-03@ 12:16:51

கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தேனி :
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி ஆகிய மூன்று விஷேசங்களும் ஒேர நாளில் வந்ததாதல் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகளில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஆடிப்பெருக்கின்போது, விளைநிலங்களில் பயிரிட்டு வேளாண் பணியைத் தொடங்குவது வழக்கம். இதேபோல சுமங்கலிப் பெண்கள் நீர்நிலைகளுக்குச் சென்று தங்களது தாலிகளை பெருக்கிக் கொள்வர். ஆடிப்பெருக்கு நாளில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பாகும். நேற்று ஆடிப்பெருக்கு தவிர ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சி ஆகிய மூன்று விஷேசங்களும் ஒரே நாளில் வந்தது. இதனால் கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி முல்லையாற்றில் நேற்று காலை முதல் பெண்கள் தங்களது தாலிகளைப் பெருக்கும் விதமாக புதுத் தாலி மாற்றிக் கொண்டனர். மேலும், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், தீர்த்தத்தொட்டி முருகன் கோயில், போடி சுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல, உத்தமபாளையம் ஞானம்மன்கோயில், சுருளிதீர்த்தம் சுருளிநாதன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், போடி பரமசிவம் கோயில், பெரியகுளம் காளகஸ்தீஸ்வரர் கோயில், மாவூற்று வேலப்பர் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

இதுதவிர தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக உசிலம்பட்டி, சிவகங்கை, ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர், சங்கரன்கோயில், தென்காசி, மஞ்சளாறு காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர். உப்புத்துறை வழியாகச் செல்லக்கூடிய சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு நேற்று சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி அமாவாசையையொட்டி வழிபடச் சென்றனர். அதேபோல, குரு பெயர்ச்சியையொட்டி தேனி அருகே முல்லைநகரில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில், நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு, தேனி எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில், வீரபாண்டி முல்லையாறு, சுருளிதீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போடி: குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியா வதை முன்னிட்டு போடி சுப்பரமணியர் சுவாமி கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 18 வகையான அபிஷேகம், சோடாபிஷேகம், யாகவேள்வி பூஜை நடைபெற்றது. பூஜையின்போது பரிகார ராசிகளான மேஷம், மிதுனம், கடகம்,கன்னி,துலாம்,கும்பம்,தனுசு ராசிதாரர்களுக்கு சிறப்பு  பூஜை நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை கோயில் தலைமை அச்சகர் சோமாஸ் கந்த குருக்களும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுமதியும் செய்திருந்தனர். போடி மேற்குத்தொடர்ச்சி மலை பிச்சாங்கரை பகுதியில் 9ம் நூற்றாண்டுக்கு முந்தைய ஸ்ரீகயிலாய கீழ சொக்கநாதர் கோயில் உள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.

இப்பகுதியில் கீழ சொக்கநாதர்,மேல சொக்கநாதர் என இரு கோயில்கள் உள்ளன. ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில் அன்னதான அறக்கட்டளைதலைவர் ஜமீன் பாண்டிய சுந்தரபாண்டியர் தலைமையில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடந்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். போடி காசிவிஸ்வநாதர் ஆலய கொட்டகுடி ஆற்றின் படித்துறையில் பெண்கள் கூட்டமாக வந்து மணலால் அம்மன் போல் சிலை வடித்து கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொண்டு அலங்காரம் செய்து, பழங்கள், உணவு வகைகள், கொழுக்கட்டை, காப்பரிசி, தாலிக்கயிறு ஆகியவற்றை வைத்து  படையல் செய்து வழிபட்டனர். பின்னர் தாலிக் கயிறை மாற்றிக்கொண்டு பெரியவர்களிடமும், சுமங்கலி பெண்களிடமும் ஆசீர்வாதம் பெற்றனர்.

ஆற்றங்கரைக்கு வந்து பெண்கள் வழிபாடு நடத்தியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்துத. சி.சி.டி கேமராவால் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். உத்தமபாளையம்: உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்- ஞானம்பிகை கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறப்புபூஜைகள் செய்து வழிபட்டனர். இதனால் கோயில் வளாகத்தில்  கூட்டம் நிரம்பி வழிந்ததது. தொடர்ந்து இங்குள்ள முல்லையாற்றில் நூற்றுக்கணக்கான பெண்கள் கூடி புது தாலிக் கயிறை மாற்றிக்கொண்டனர். இதற்காக கரையோரம் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்புப் பூஜைகளை செய்து வழிபட்ட பெண்கள், ஆற்றில் இறங்கி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதனால் உத்தமபாளையம் முல்லையாற்றில் கூட்டம் நிரம்பி வழிந்ததது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்