SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை பவானி கூடுதுறையில் புனித நீராடி வழிபாடு

2016-08-03@ 11:48:45

பவானி : ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குத் தெரியாத அமுத நதியும் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில், ஆடிப் பெருக்கு விழாவும், அமாவாசையும் ஒரு நாளான நேற்று வந்ததால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு கூடுதுறைக்குச் செல்லும் நுழைவாயில் திறக்கப்பட்டது. புனித நீராடும் பக்தர்களால் படித்துறைகள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. மேலும், பரிகாரத்துக்கு வந்த பக்தர்களால் பரிகார மண்டபங்களும் நிறைந்து காணப்பட்டது. காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் சங்கமேஸ்வர் மற்றும் வேதநாயகி அம்மனுக்கு வழிபாடு நடத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேலும், காவிரித் தாய்க்கு கனிகள் வைத்து வழிபாடும் நடத்தப்பட்டது. பெண்கள் காவிரித் தாயை வழிபட்டு வாழ்க்கை சிறக்க புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். ஆடிபெருக்கு விழாவை மக்கள் கொண்டாட தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீரோட்டம் குறைந்திவிட்டதால் நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம், பரிசல்துறை, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு வந்து காவிரியில் நீராடி காவிரித் தாய்க்கு பூஜை செய்து தாலிக்கயிறு மாற்றி வழிபட்டனர். காலிங்கராயன், காரணாம்பாளையம் ஆகிய அணைக்கட்டு பகுதிகளிலும் பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு மாநகர பகுதியில் உள்ள பெரியமாரியம்மன் கோவில், கள்ளுக்கடைமேடு பத்தரகாளியம்மன் கோவில், மற்றும் மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், பண்ணாரிமாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், சென்னிமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. வஉசி பூங்கா, அறிவியல் பூங்கா களை கட்டி காணப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்