SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீபிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு பிரமோற்சவம்

2016-07-30@ 12:21:03

கொடியேற்றத்துடன் தொடக்கம்

செங்கம் :
செங்கம் அருகே ஸ்ரீபிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கம் வட்டம், நீப்பத்துறையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயில் மற்றும் தென்பென்னை ஆற்றில் உள்ள சென்னம்மாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18ம் நாள் விழாவான ஆடிபெருக்குவெகு விமரிசையாக நடைபெறும். விழாவில், வெளிமாவட்டத்திலிருந்தும் வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். மேலும், பக்தர்கள் பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நீப்பத்துறை ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை கோயில் கொடிமரத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவதுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து, முதல் நாளில் சூரிய பிரபை வாகனத்திலும், 2ம் நாளான இன்று சந்திர பிரபை வாகனத்திலும், 3ம் நாளான நாளை சிம்ம வாகனத்திலும், 4ம் நாளான நாளை மறுதினம்  அனுமந்த வாகனத்திலும், 5ம் நாள் கருட வாகனத்திலும், 6ம் நாள் திருக்கல்யாணமும், 7ம் நாள் கஜ வாகனத்திலும் ஆடிபெருக்கு விழாவும், 8ம் நாளில் தேரடி மிதித்தல், 9ம் நாள் குதிரை வாகனத்திலும், 10ம் நாள் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. விழாவையொட்டி, வாண வேடிக்கை, பாட்டு கச்சேரி, நையாண்டி மேளம், நாதஸ்வர கச்சேரி, மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. மேலும், ஆடிபெருக்கு நாளன்று போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வரங்கன், கோகுல வாணன் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்