SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி 2வது வெள்ளிக்கிழமை தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

2016-07-30@ 12:10:37

தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆன்மீக சிறப்பு பெற்ற ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்யம் கிட்டும், தொழில் விருத்தியாகும், கல்வி ஞானம் கிடைக்கும், செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகமாகும். இதன்படி ஆன்மீக சிறப்பு பெற்ற தூத்துக்குடி சிவன் கோயிலிலுள்ள துர்க்கை அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஆடி மாத 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் கூடிய வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

  • moon27

    பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்