SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமர்க்களமாக துவங்கியது ஆடிப்பூர திருவிழா ஆண்டாள் கோயிலில் கொடியேற்றம்

2016-07-29@ 12:32:47

ஆக. 5ல் தேரோட்டம்

திருவில்லிபுத்தூர் :
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. ஆக. 5ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேரோட்ட திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிப் பட்டம் கோயிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயிலில் கொடிப் பட்டம், கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை, வழிபாடு நடத்தப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜா, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தையொட்டி திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஆன்மிக சொற்பொழிவு, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆக. 5ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. நேற்று இரவு முன்னோட்டமாக ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்