SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டுமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா

2016-07-28@ 12:06:41

ஆரணி : ஆரணி டவுன் வண்டிப்பாளையம் பாட்சா உடையார் தெருவில் உள்ள ஸ்ரீகில்லா தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட அம்மன் பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக மேள தாளத்துடன் திருவீதி உலா வந்தது. பின்னர் கோயிலை வந்தடைந்ததும்  எட்டியம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வாண வேடிக்கை, பம்பை உடுக்கை சிலம்பாட்டத்துடனும் நடைபெற்றது. திருவீதி உலாவை முன்னாள் எம்பி ஏ.சி.சண்முகத்தின் மனைவி லலிதாலட்சுமி சண்முகம் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் நகராட்சி உறுப்பினர்கள் ஏ.சி.பாபு, எஸ்.கே.ரத்தினகுமார், முன்னாள் உறுப்பினர்கள் ஒட்டல் ஜி. குமார், வி.பி. செல்வராஜ்,  எஸ்.கே சிட்டிபாபு, பி.கே.ஜி. லோகு, எம்.கேசவன், கே.ஆர். ராஜேந்திரன்  உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

  • franceworldleaders

    பிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: உலகத்தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்