SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

2016-07-28@ 11:41:08

30ம் தேதி வளைகாப்பு வைபவம்

நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30ம் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. பிரசித்திப்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆடிப்பூர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 4ம் திருநாளான வருகிற 30ம் தேதி மதியம் 12 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. இதில் திருமணமான பெண்கள், குழந்தை வரம் வேண்டி வளையல் காணிக்கை செலுத்துவர். இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாள் வீதிஉலா நடக்கிறது. ஆடிப்பூரம் 10ம் திருநாளான ஆக. 5ம் தேதி இரவு 7 மணி முதல் 7.20க்குள் ஊஞ்சல் மண்டபத்தில், முக்கிய நிகழ்ச்சியான முளைக்கட்டு திருநாள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்