SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா

2016-07-28@ 11:37:20

கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவையாறு :
திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் ஆடி பூரவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவையாற்றில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி பூரவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு விழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்புரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 2ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலை காட்சி தென் கயிலாயத்தில் நடக்கிறது. அப்போது, ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி அப்பர் சுவாமி கயிலை காட்சி நடக்கும். இதில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொள்வர். வரும் 4ம் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது. 6ம் தேதி இரவு பிராயசித்தாபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது. விழாவையொட்டி தினமும் காலை பல்லக்கிலும், இரவு வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி காட்சி தருவார். தினமும் அம்மன் கோயில் கொலுமண்டபத்தில் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்புரான் சுவாமிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்