SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிநேகவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா துவக்கம்

2016-07-28@ 10:46:41

திருவாடானை : திருவாடானை சிநேகவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிரெத்தினேஸ்வரர் சமேத சிநேகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பாண்டிஸ்தலம் 14ல் எட்டாவது சிவதலமாகும். இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், கிளி வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 4ம் தேதி தேரோட்டம் நடைபெறும். 7ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழாவில் 15 நாட்களும் கலைநிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி மெக்லரின் எஸ்கால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்