SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நாளை (ஜூலை.27) ஆடிக்கிருத்திகை பெருவிழா

2016-07-27@ 12:14:56

ஆற்காடு : ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் இன்று ஆடி பரணி விழாவும், நாளை 28ம் தேதி ஆடிக்கிருத்திகை பெருவிழா நடைபெற உள்ளது.  ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆண்டு தோறும் பரணி விழா மற்றும் ஆடிக்கிருத்திகை பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தாண்டு ஆடி பரணியை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், காலை 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பாலமுருகன் மலை வலம் வந்து கீழ்மின்னல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, நாளை கிருத்திகையையொட்டி அதிகாலை 3 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் 3.30 மணிக்கு ராணிப்பேட்டை நகரத்தார் சங்கம் சார்பில் பாத யாத்திரை குழுவினரின் சிறப்பு பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை பாலமுருகனடிமை சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். 4.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதிகாலை 5 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பாட்டுக்கு பாட்டு புகழ் திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் ஆர்.கார்த்திகேயன், கோயில் மேலாளர் சிவனாரமுது மற்றும் கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். விழா முன்னிட்டு பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்