SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குண்டாலம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா

2016-07-27@ 12:09:19

சித்தூர் : சித்தூர் அசோக்புரத்தில் உள்ள குண்டாலம்மன் கோயிலில் நேற்று கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. சித்தூர் அசோக்புரம், விநாயகபுரம், டாப்லைன் ஆகிய பகுதிகளுக்கான குண்டாலம்மா கோயில் டாப்லைன் பகுதியில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவை ஆண்டுக்கு ஒருமுறை இப்பகுதி மக்கள் இணைந்து நடத்துகின்றனர். 22ம் ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூழ்வார்த்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வரிசையாக வந்த பக்தர்கள் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த கொப்பறையில் கூழ்உற்றிச்சென்றனர்.

இதையடுத்து அம்மனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்படி அம்மனுக்கு புடவை சாற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு நேற்று மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோயில் தர்மகர்த்தா முருகேஷ், கவுன்சிலர்கள் பிரமிளா, கிருபானந்தம் மற்றும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். கடைசிநாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. மாலையில் அலகு குத்திய ஓம் சக்தி பக்தர்கள் ஊர்லவமாக வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்