SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆடி செவ்வாயை முன்னிட்டு குமரி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

2016-07-27@ 11:04:20

நாகர்கோவில் : ஆடி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டு குமரி அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும். ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ் வழங்குவது விஷேசமாகும். ஆடி செவ்வாய் குமரி மாவட்டத்தில் மிகவும் விசேஷமானதாகும். அதன்படி ஆடி செவ்வாய் கிழமையான நேற்று காலையிலேயே அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சிறப்பு பூஜைகள் மற்றும் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் நேற்று ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன்கோயிலில் கொழுக்கட்டை படைத்து பெண்கள் வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • teslacar_won

    விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்