SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தணி முருகன் கோயில் 28ம் தேதி ஆடி கிருத்திகை

2016-07-26@ 13:05:07

போக்குவரத்து மாற்றம்

திருவள்ளூர் :
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி இன்று முதல், வரும் 30ம் தேதி வரை திருத்தணி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்.பி., சாம்சன் அறிவித்துள்ளார். அதன் விவரம்: திருப்பதியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு செல்லும் வாகனங்கள், திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து கனகம்மாசத்திரம், திருவாலங்காடு வழியாக அரக்கோணம், காஞ்சிபுரத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி செல்லும் வாகனங்களும் இதே வழியில் வர வேண்டும். அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து கழக டெப்போ அருகிலும், சித்தூர் சாலையில் மேல் திருத்தணிக்கு அருகிலும், சென்னை மற்றும் திருப்பதிக்கு செல்லும் வாகனங்களுக்கான 2 பஸ் நிலையம் நெடுஞ்சாலை துறை பயணியர் மாளிகை அருகிலும் என மொத்தம் 4 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயில் செல்லும் பாதையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. பழைய தர்மராஜா கோயில்  திடல் மற்றும் பிடிஓ அலுவலகம் எதிரில் கார் மற்றும் வேன் நிறுத்தலாம்.

சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பைபாஸ் ரவுண்டானா அருகிலும், சித்தூர், வேலூர் மார்க்கத்திலிருந்து வரும் கார்கள், வேன்கள், லாரி மற்றும் அனைத்து வாகனங்களும் மேல் திருத்தணி தற்காலிக பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் கார், வேன்கள், லாரி மற்றும் அனைத்து வாகனங்களும் வேலஞ்சேரி சந்திப்புக்கு அருகில் உள்ள பத்மாவதி நகரிலும், திருப்பதி மார்க்கத்திலிருந்து வரும் வேன், கார்கள் பழைய ஆர்டிஓ செக்போஸ்ட் அருகிலும், அரக்கோணம் மார்க்கத்திலிருந்து வரும் வேன், கார்கள், பஸ் டிப்போ பின்புறம் உள்ள திடலிலும் நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் 28ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து வித லாரிகள், கன்டெய்னெர் லாரிகள் திருத்தணி நகருக்குள் நுழைய அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸ்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று முதல் திருத்தணிக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விஐபிகளுக்கு மலைக்கோயில் செல்வதற்கு கார் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. நாளை பரணி கார்த்திகை என்பதால், இன்று முதல் மாவட்ட எஸ்.பி., சாம்சன் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயித்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்களும் ஆங்காங்கே சோதித்து வருகின்றனர் என மாவட்ட எஸ்.பி., சாம்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்