SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீகோலம் கொண்ட அம்மன் கோயில் ஆடி மகா உற்சவ விழா

2016-07-26@ 12:51:29

திருவள்ளூர் : திருவள்ளூர் முகமதலி தெருவில் உள்ள ஸ்ரீகோலம் கொண்ட அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு மகா உற்சவ விழா கடந்த 22ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நகரில் உள்ள பெண்கள், கோயில் வாசலில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். அன்று மாலை ஸ்ரீவீரராகவர் கோயிலில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு அபிஷேகமும், அன்னதானமும், மதியம் கூழ் வார்த்தல், மாலை 6 மணிக்கு வீரராகவர் கோயில் குளத்தில் இருந்து தீச்சட்டி ஏந்தி ஊர்வலமும், தொடர்ந்து பக்தர்கள் வேம்புலியம்மன் ஆலயத்தில் இருந்து தங்களது உடலில் அலகு குத்தியும், அம்மனை இழுத்து வந்தும் நேர்த்தி கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கே.எஸ்.முத்துகிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

  • Chicagohospitalkill

    அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

  • MahanathiBridgeAccident

    ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்