SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

2016-07-25@ 12:37:42

பக்தர்கள் தீ மிதித்தனர்

திருச்சி : திருச்சி முதலியார்சத்திரம் தேவி கருமாரியம்மன்கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீக்குளித்தனர். திருச்சி முதலியார் சத்திரம் பெல்ஸ் கிரவுண்ட் ரயில்வே காலனி, ஆலம் தெருவில் விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. நேற்று காலை காவிரியாற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து கரகம், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி, அலகுகாவடிகள் எடுத்து சங்கிலிக் கருப்பு, மதுரை வீரன் சுவாமிகள் முன் செல்ல பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் தீமிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (26ம் தேதி) மாவிளக்கு பூஜை, ஊஞ்சல் அலங்காரம், 28ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சி, 29ம் தேதி குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்