விஐபி பூஜையறை : பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

Date: 2013-12-11@ 16:00:48

‘‘மதுரை மாவட்டம், சோழவந்தான் சொந்த ஊரு. அப்பா தமிழாசிரியர். இளம் வயதில் திராவிட கழகத்தோட ஜமீன் ஒழிப்பு போராட்டத்துல எல்லாம்  ஆர்வமா கலந்துக்கிட்டவர். ஆனால் எப்படியோ அவர் மனசுல பக்தி அரும்பா தோன்றி, பூவா மலர்ந்து மணம் வீச ஆரம்பிச்சிடுச்சு’’ என ஆரம்பிக் கும் பேராசிரியர் ஞானசம்பந்தம் இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், நடிகர். ‘‘அப்பா காலையில பூஜைக்குத் தயாராகும் போது கூடவே நானும் இருக்கணும். சந்தனம் அரைத்து தருவதில் இருந்து, அவர் எதிர்பார்ப்பதையெல்லாம் ஊகித்து, தொண்டு செய்யணும். எங்கள் வீட்டுத் தோட்டப் பூக்கள்தான்னு இல்ல, ஊரில் எந்த வீட்டில் பூத்திருந்தாலும் அப்பாவோட பூஜைக்காக  பூக்களைப் சேகரித்து வந்து விடுவேன். ஆறு வயசுல இருந்து கல்லூரி முடிக்கும் வரை இந்த மலர் கைங்கர்யம் நீடித்தது. ‘இது பவழ மல்லி.

காம்பு  பவழ நிறத்திலும் இதழ்கள் வெள்ளையாகவும் இருக்கறதால இந்த பேருன்னு’ பூஜையோட சேர்த்தே பாடமும் நடக்கும். அவர் பாடின தேவாரம் திருவாசகமெல்லம் செவிவழியா புகுந்து என் இதயத்துல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துடுச்சு. தமிழார்வம் எனக்கு எங்க பூஜையறையாலதான் வந்தது. எங்க பகுதி கோயில்களில் திருவெம்பாவை-திருப்பாவை பற்றி 14 ஆண்டுகளா பேசினேன். அப்பாவோட ஆசிரியர் திருநாராயண அய்யங்காரின் படம் இது. 13 வயசுல அப்பாவை பள்ளிக்கூடத்ல சேர்த்து, கல்வி கண்திறந்து, ஆளாக்கியர். அப்பாவும் கும்பிட்டார். இப்ப நானும். இது என் அம்மாவோட பாதச் சுவடு. நாங்க வீடு கட்டி, சிமென்ட் பூசினப்போ, அம்மா தெரியாம ஈர சிமென்ட் பூச் சுல காலை வெச்சிட்டாங்க. அம்மாவோட பாதம் அப்படியே பதிஞ்சு போச்சு. அதை அப்படியே எடுத்து வெச்சிட்டேன்.

திருநகரில் ஒருநாள் காலை  ராமானுஜர் பற்றி பேசினேன். அன்று மாலை ஒரு அன்பர் இந்த ராமானுஜரின் திருமேனியைத் தந்தார். 800 ஆண்டுகளுக்கு முன்னரே தீண்டாமைக்கு  எதிராக போராடி, ஆலய பிரவேசம் நடத்திய புரட்சித் துறவி ராமானுஜர். இந்த கலைவாணி சிலை, பெரம்பலூர் பகுதியில் மட்டுமே விளையும் மஞ்சள் கடம்பு மரத்தால செய்யப்பட்டது. இதுவும் தமிழ்  தந்த பரிசே. இது  தவிர பெற்றோரின் நிழற்படம், சாய்பாபா, விநாயகர்ன்னு ஏராளமான சுவாமிகள் என் பூஜையறைல இருக்காங்க. என் புத்தக வெளியீடும், மதுரையில்  நான் கட்டிய புது வீட்டின் கிரஹப்பிரவேசமும் ஒன்றாய் நடந்தன. அன்று பரிசாய் வந்த மீனாட்சி, என் பூஜையறையின் அரசி.

பழநி பாதயாத்திரையை வித்தியாசமாக மேற்கொள்வது என் வழக்கம். குடும்ப உறவுகளோடு, ஊர்க்காரங்க, மாணவர்கள் எல்லாம் சூழ அந்த யாத் திரை உற்சாகமாய் இருக்கும். என் அப்பாவுக்கு பார்வைப் பிரச்னை வந்தபோது, அவருக்காக வேண்டிக் கொண்டு சபரி மலையில் ஜோதி தரிசனம்  பார்த்துவிட்டு வந்தேன், அப்பா பார்வை திரும்பக் கிடைக்கப் பெற்றார்! ‘கல்லே ஆயினும் சொல்லி அழு’ன்னு ஒரு பழமொழி இருக்கு. மனிதன்  மனம் விட்டு பேசுவது சுவாமிகிட்டதான். இந்த பழமொழி எத்தனை சத்தியம் பாருங்க’’ அவரது பேச்சின் நெகிழ்ச்சி கண்களில் தெரிகிறது.

-எஸ்.ஆர்.செந்தில்குமார்

படங்கள்: ஜெயப்பிரகாஷ்

(அடுத்த வார விஐபி -தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரத்னா)

is there a cure for chlamydia phuckedporn.com home std test

Like Us on Facebook Dinkaran Daily News