SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம்

2016-03-23@ 10:44:50

காரைக்கால் : காரைக்கால் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் பிரமோத்சவ விழா கடந்த 14ம் தேதிதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகம், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 5ம் நாள் விழாவில் மின்சார சகோபுர வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் கைலாசநாதர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கரிகாலன், கூடுதல் கலெக்டர் திணேஷ், கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனியதிகாரி ஆசைதம்பி மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பின்னர், மாவட்ட நீதிபதி ராதாகிருஷ்ணன், தொழில் அதிபர்கள் அமுதா ஆறுமுகம், சிவகணேஷ், இமாலயன் பக்கிரிசாமி மற்றும் ஏராளதான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பாரதியார் வீதி, கென்னடியார்வீதி, மாதாகோயில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இன்று காரைக்கால் அம்மையார் குளம் எனும் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி, 25ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-12-2018

    13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்