SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடந்தையில் மகாமகம் விழா 13ல் துவக்கம்

2016-02-06@ 12:32:26

இன்று (பிப்.6) தீர்த்தவாரி ஒத்திகை    

கும்பகோணம்: கும்பகோணம் மகாமக விழா வரும் 13ம் தேதி துவங்க உள்ளது.  தீர்த்தவாரியன்று பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் முன்கூட்டியே தீர்த்தவாரி ஒத்திகை இன்று நடந்தது. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடந்தையில் நடைபெறும் மகாமக விழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13ம் தேதி மதியம் கும்பகோணத்தில் உள்ள 6 சிவன்கோயில்களில் கொடியேற்றப்பட்டதும் விழா துவங்கியதாக அறிவிக்கப்படும்.அது முதல் மகாமக குளத்திலும், பொற்றாமரை குளத்திலும், காவிரி ஆற்றிலும் பக்தர்கள் நீராடுவார்கள். தினமும் பல லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள். 22ம் தேதி விழாவின் நிறைவு நாள். அன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறும்.

12 சைவ சுவாமிகள் மகாமக குளத்திலும், 5 வைணவ சுவாமிகள் காவிரி ஆற்றிலும் தீர்த்தவாரி காண்பார்கள். அப்போது பல லட்சம் பக்தர்கள் மகாமக குளத்திலும், காவிரியிலும் நீராடுவார்கள். தீர்த்தவாரியின்போது நீராடுவது மிகவும் புண்ணியம் என்பது ஐதீகம்.கடந்த 2004ம் ஆண்டு மகாமகத்தின்போது குடந்தை மகாமக குளத்தில் 35 லட்சம் பக்தர்கள் நீராடினார்கள். இந்த ஆண்டு 75 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என கணிக்கப்பட்டு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.22ம் தேதி மதியம் குடந்தையில் உள்ள சைவ சுவாமிகளான கும்பேஸ்வர சுவாமி, சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரன், காசிவிஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வர் ஆகிய சுவாமிகள் கோயிலில் இருந்து புறப்பட்டு மகாமக குளத்தின் வடக்கு கரை வழியாக குளத்தில் இறங்கி தீர்த்தவாரி காண்பார்கள்.

அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர் ஆகிய சுவாமிகள் கிழக்கு கரை வழியாக இறங்கி தீர்த்தவாரி காண்பார்கள்.காளகஸ்தீஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேற்கு கரையிலும், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், கவுதமேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தெற்கு கரை வழியாகவும் இறங்கி தீர்த்தவாரி காண்பார்கள்.
வைணவ சுவாமிகளான சாரங்கபாணி, சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகபெருமாள் சுவாமி, ராமசுவாமி ஆகிய சுவாமிகள் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி காண்பார்கள்.ஒரே நேரத்தில் 17 சுவாமிகளும் தீர்த்தவாரி காண்பது மகாமகத்தின் உச்சபட்ச சிறப்பான வைபவம். இதனை காணவும், அப்போது புனித நீராடவும் பல லட்சம் பக்தர்கள் குடந்தையில் திரளுவார்கள்.

தீர்த்தவாரியின்போது (22ம் தேதி) இந்த விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்திகை செய்து பார்த்தனர். இன்று காலை 7 மணிக்கு 17 கோயில்களில் இருந்தும் சுவாமிகளை சுமந்து செல்லும் வாகனம்(பட்டறை) குளம், காவிரி ஆற்றுக்கு இழுத்து வரப்பட்டது.கோயிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சுவாமிகள் புறப்பட்டால் எங்கும் நிறுத்தக்கூடாது என்பதால் எந்தெந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்து அந்தந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடுவதற்கும், சரியான நேரத்தில் தீர்த்தவாரி நடத்தி முடிக்கப்படுகிறதா என்பதை அறியவும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.50 டன் பூக்கள்மகாமக தீர்த்தவாரியின்போது மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடசலிங்கங்கள், 16 கால் மண்டபம், காலசந்தி கட்டளை, சக்கராபடித்துறை ஆகிய இடங்களை அலங்கரிக்க ஸ்ரீரங்கத்தில் இருந்து 50 டன் பூக்கள் கும்பகோணத்திற்கு 21ம் தேதி மாலை அனுப்பப்பட உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்