SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முக்தி தரும் தைப்பூசத் திருவிழா

2016-01-23@ 13:03:02

முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த இடம் பழநி. உலகப்புகழ் புண்ணியத்தலம், நக்கீரர் பாடியது, முருகனின் மூன்றாம் படை என பல்வேறு புகழை பெற்று பழநி திருத்தலம் விளங்கி வருகிறது. பழம் + நீ = பழநி என ஆனது.தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் வந்து சண்முகநதியில் நீராடி முருகனிடம் அருள்பெற்று சென்ற ஆன்மீகத்திருத்தலம் பழநி. ஆன்மீகத் திருவிழா நகரம் என்றும் இத்தலத்தை அழைக்கின்றனர். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் கோலாகலமாக நடைபெறுகிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை நடக்கிறது.

தைப்பூசம் விளக்கம்:
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நிலையில் ‘தைப்பூசும் தை மாதம்’ என்பதே தைப்பூசம் ஆனது. தை மாதம் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கள நாளில் பழநியாண்டவருக்கு கொண்டாடப்படும் உயர்வான திருவிழா தைப்பூசத்திருவிழா. இந்நாளில்தான் சுவாமி முருகனின் அன்னை உமாதேவியார் கொடிய அரக்கனான தாரகனை கொன்று அழிப்பதற்கு வெற்றிவேல் வாங்கிய தினம்.தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினம் தை மாத பூச நட்சத்திரத்தில் வருகிறது. இதனைப் போற்றும் விழாவாக தைப்பூச விழா ஆண்டுதோறும் முருகன் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பழநியில் உள்ள ஊர்க்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் வெகு சிறப்பாக இத்திருவிழா நடைபெற்று வருகிறது. தைப்பூச முருகனை காண பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக காணிக்கையை சுமந்து, பாதயாத்திரையாய் பழநியை நோக்கி வந்த வண்ணமாய் உள்ளனர்.

பாதயாத்திரை விளக்கம்: தைப்பூச முருகனை காண பக்தர்கள் காவியுடை அணிந்து, விரதம் இருந்து பலநூறு மைல்கள் பனி, வெயில் பாராது நடந்து வருகின்றனர். குறிப்பாக காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆறுமுகக்காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். பழநியைச் சுற்றியுள்ள மண்டபங்களில், கிரிவீதியில் மற்றும் சண்முகாநதியில் பக்தர்களின் காவடி ஆட்டம் அதிகளவு காணப்படும். நத்தம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஜெயங்கொண்டம் போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் சேவல் காவடிகள், மயிற்காவடி, வேல்காவடி, ஆறுமுகக்காவடிகள் சுமந்து வருகின்றனர்.

பாதயாத்திரையால் தங்களின் பாவ வினைகள் நீங்குகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். வழிநடையாய் பக்தர்கள் நடந்து வருகின்ற பொழுது, முருகன் தங்களுடன் நடந்து வருவதாய் பக்தர்கள் கூறுகின்றனர், நம்புகின்றனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக பாதயாத்திரையாக பக்தர்கள் இங்கு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து தைப்பூச முருகனைக் காண வருகின்றனர்.

பாதயாத்திரை பாடல்கள்:

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்களது உடல் சோர்வை போக்க முருகனை பற்றிய பாடல்களைப் பாடி வருகின்றனர். அவற்றில் ஒன்றை பார்ப்போம்.

‘சந்தனமாம் சந்தனம் பழநி மலை சந்தனம்
சந்தனத்தைப் பூசிக்கிட்டு
சந்தோஷமாய்ப் பாடுங்க
குங்குமமாம் குங்குமம் குன்றக்குடி குங்குமம்
குங்குமத்தைப் வச்சுக்கிட்டு குணமுடனே பாடுங்க....’


என்று முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாகப் பாடி, ஆடி வருவதைக் காண முடிகிறது. வழிநடையின் துன்பம் தீர பக்தர்களின் முருகனின் பெருமையை வாய்விட்டுப் பாடி வருகின்றனர்.

காணிக்கைகள் விளக்கம் : தைப்பூசம் காண வருகின்ற பக்தர்கள் தங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்க பல்வேறு காணிக்கைகளைச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

* முடிக்காணிக்கை செலுத்துவதால் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தைப்பேறு கிடைக்கவும் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்துகின்றனர்.
* முருக பக்தர்கள் பணம், நாணயங்கள், வேல், கடிகாரம், மோதிரம் போன்றவற்றையும், உண்டியல் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
* சேவல், மயில், பசு போன்ற உயிரின காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.
* தைப்பூச நாளில் பக்தர்கள் பலர் நோய் தீர அன்னக்காவடி சுமந்து வருகின்றனர்.
* ஆறுமுகக்காவடி என்ற மயிற்பீலி காவடியை பக்தர்கள் மிகுதியாக கொண்டு வந்து நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். விரதப்பலன்கள் பழநியை நோக்கிப் பாதயாத்திரையாய் வந்து  முருகப் பெருமானை மனம் உருகி வழிபட்டால் பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனம் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் பெருகிடும் என்று நம்புகின்றனர்.

நிலத்தில் விளைச்சல் பெருக, தைப்பூச நாளில் பக்தர்கள் தானியங்களை சூறை விட்டு வழிபாடு செய்கின்றனர். நெல், கம்பு, தினை, கடலை, மிளகாய் போன்ற தானியங்கள் பழநிக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்படுகின்றது. பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வளமை அடையும் என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். சண்முகநதி: பழநி திருத்தலத்தில் சண்முகநதி பழநி மலைக்கோயிலில் இருந்து வடமேற்கு திசையில் ஏறக்குறைய 6 கிமீ தூரத்தில் கோவை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆறு கிளை நதிகளின் முழுவடிவம் சண்முகநதி. மேற்குமலைத் தொடரில் அமைந்துள்ள பாலாறு, பொருந்தலாறு, வரட்டாறு, பச்சையாறு கானாறு, கல்லாறு ஆகிய ஆறு நதிகளின் ஒட்டுமொத்த நதிகளின் முழு வடிவமே சண்முகநதி என்பர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

 • jetairweys_delli11

  வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்