SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும் தைப்பூசம்!

2016-01-20@ 15:00:04

தைப்பூசம் தினம் அன்றுதான் உலகம் தோன்றியதாக ஐதீகம். உங்கள் இஷ்டதெய்வ கோயிலுக்கு செல்ல இதை விட நல்ல நாள் இருக்கவே முடியாது.  தைப்பூசத்தன்று, முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது. இதன் உள்ளர்த்தம் நம்மை தாழ்த்தும்  கெட்ட சக்திகள் அழியும் நாள் என்பது ஆகும். சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாளும்  தைப்பூசமே என்பர். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத்  தரும். நம் முன்னோர் தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர்.  தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.

உணவு உண்ணாமல் மூன்று வேளையுமே பால், பழம் மட்டுமே உண்பர். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை  தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர். சித்தர்கள் கூடும் திருவண்ணாமலை, சதுரகிரி போன்ற ஆலயங்கள் இந்நன்னாளில் மிகுந்த சக்தி நிரம்பி  வெளிப்படும். கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத்தன்று ஞானசபையில் அதிகாலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார்  இராமலிங்க அடிகளார் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாகவே காட்டினார். குலதெய்வ கோயில் வழிபாடு, முருகன் வழிபாடு ,சிவ வழிபாடு  செய்ய அருமையான நாள் இதுதான். பக்தர்கள் தவறவிடவே கூடாத நாள். இந்நாள் இரவில் பெளர்ணமி நிலவொளியில் குடும்பத்தாருடன் உணவு  அருந்துங்கள். குடும்ப ஒற்றுமை மேம்படும்!

ஜோதிடர் ‘நல்லநேரம்’ ஆர்.கே.சதீஷ்குமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்