SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமுருகனின் திருவருள் தரும் திருவருட்பா!

2016-01-20@ 14:57:59

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

பாடலுக்கு உரை :

தருமம் செய்பவர் மிகுந்து வாழும் சென்னையில் கந்த கோட்டத்துக்குள் அமைந்திருக்கும் திருக்கோயிலில் எழுந்தருளும் கந்தவேளே, தண்ணிய  முகத்தையுடைய தூயமணிகளுட் சிறந்த சைவமணியாகிய ஆறுமுகங்களை உடைய தெய்வமணியே, ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர்  போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு  என்னை அடையாவாறு காக்க வேண்டும். பெருமை சான்ற உனது புகழையே நான் பேசுபவனாகவும், பொய்மை மொழிகளைப் பேசாதவனாகவும் இருக்க  வேண்டும். பெருமை நல்கும் நெறியையே கடைப் பிடிப்பவனாக அமைய வேண்டும். அன்றி மதமென்னும் பேயால் பிடிபடாதவனாக இருக்க வேண்டும்.  இயல்பாகவே தோன்றுகிற பெண்ணாசையை என் மனம் மறந்தொழியவும், அதற்கு ஈடாக உன்னை மறவாது தொழுகும் தன்மை என் நெஞ்சில் நிலை  பெறவும் வேண்டும். மதிநுட்பமும் உன் கருணையாகிய நிதியமும், நோயற்ற வாழ்வும் உடையவனாக வேண்டும். இவற்றை அருளுக.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்