SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடம்பவனேஸ்வரர் கோயிலில் ஜன.24ம் தேதி தைப்பூச விழா

2016-01-20@ 12:23:50

மாலையில் தீர்த்தவாரி

குளித்தலை : குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் வருகிற ஜனவரி 24ம்தேதி தைப்பூச விழாவையொட்டி அன்று மாலை 6 மணிக்கு காவிரியில் 8 ஊர் சுவாமிகளின் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. காவிரியின் தென்கரையில் குளித்தலை தாலுகா கடம்பந்துறையில் முற்றிலாமுலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் அமைந்துள்ளது. காசியை விஞ்சிய அருள் வழங்கும் சிறப்பு பெற்றதும், குபேர திசையெனப் போற்றப்படும் வடதிசையை நோக்கி எழுந்தருளியுள்ளதும், அப்பர், அருணகிரியார், காடவர்கோன் போன்ற அருளாளர்களால் பாடப்பெற்றதும், கண்ணுவ முனிவருக்கும், தேவர்களுக்கும் சிவபெருமான் கடம்பமரத்தில் தோன்றி காட்சியளித்ததும், மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களையும் ஒருங்கே அமையப்பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயிலில் தைப்பூச திருவிழா வருகிற 24ம்தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.

அன்று, குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில், அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரிசுவரர் கோயில், பேட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்யார்சுனேசுவரர் கோயில், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்யார்சுனேசுவரர் கோயில், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர் கோயில், முசிறிகற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீசுவரர் கோயில், வெளூர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் கோயில் ஆகிய 8ஊர் கோயில்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகள் மற்றும் அம்பாள் காவிரியில் எழுந்தருளும் (சந்திப்பு) நிகழ்ச்சி மாலை 4.15 மணிக்கு மேல் 5.30 மணிக்கு நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு மேல் 6.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது. ஜனவரி 25ம்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சந்திப்பு தீபாராதனை சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இவ்விழாவில் 8 கோயில்களிலிருந்து சோமஸ்கந்தர் அம்பாள்களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி கொடுப்பதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் மற்றும் தைப்பூசவிழா குழுத்தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் செயல் அலுவலர்கள் யுவராஜ், ராமமூர்த்தி, அய்யம்மாள், ஜெயலதா, ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், சவுந்திரராஜன், கோமதி, பிரேமலதா ஆகியோர் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2019

  19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்