SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சங்கமேஸ்வரர் கோயிலில் அன்னாபிசேகம்

2015-10-28@ 10:06:52

கோவை : கோவை கோட்டை சங்கமேஸ்வரசுவாமி கோயிலில் ஐப்பசி மாத பெளர்ணமி முன்னிட்டு நேற்று (அக். 27) சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு நூறு கிலோ அரிசியில் நெய்வேத்தியம் செய்து அன்னத்தினாலும், காய்கறிகள், பழவகைகளாலும், இனிப்புகளாலும் சங்கமேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர், இரவு 8 மணிக்கு சங்கமேசுவர பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் ராம்நகர் ராமர் கோயில், ராம்நகர் விஎம் தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு 60 கிலோ சாதம், 25 கிலோ காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், தேனீஸ்வரர் கோயில், நல்லம்பாளையம் சிவன் கோயில் என அனைத்து சிவன் கோயிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து இருந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்